இஸ்ரேலில் பல இடங்களில் கத்திக் குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்கள் தொடர்ந்துவர இஸ்ரேலிகள் மேலும் இருவர் கொல்லப்பட்டும், பலர் காயம் அடைந்தும் இருக்கின்றனர்.
கிழக்கு ஜெருசலெத்தில் ஒரு பேருந்தில் நுழைந்த தாக்குதலாளிகள் இருவர் துப்பாக்கியால் சுட்டும், பயணிகளை கத்தியால் குத்தியும் இருந்தனர்.
இதில் ஒருவர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருந்தனர்.
ஜெருசலெத்தின் மையப் பகுதியில் பேருந்து நிறுத்தம் ஒன்றுக்கு காரை ஓட்டிவந்த வேறொரு தாக்குதலாளி. அங்கிருந்தவர்கள் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தினார். இதில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டும் வேறு ஒருவர் சிறு காயத்துக்குள்ளாகியும் இருந்தனர். தாக்குதல் நடத்தியவரும் காயமடைந்துள்ளார்.
டெல் அவிவ் புறநகர்ப் பகுதி ஒன்றில் வேறோரு கத்திக் குத்துச் சம்பவம் நடந்துள்ளது.
தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுபவர் சுற்றிருந்தவர்களால், அடித்து உதைக்கப்படுவதை சம்பவத்தைக் கண்டவர்கள் எடுத்த வீடியோ படங்கள் காட்டுகின்றன.
தத்தமது மத புனிதத் தலங்களுக்கு சென்றுவருவதில் இருக்கும் தடை தொடர்பாக இஸ்ரேலிகள் பாலஸ்தீனர்கள் இடையில் நிலவும் பதற்றம் காரணமாக இம்மாதம் வன்முறை அதிகரிக்க டஜன் கணக்கான கத்திக்குத்து சம்பவங்கள் நடந்துள்ளன.