Thursday, 1 October 2015

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு! பிரதமரின் ஜப்பான் பயணத்தில் சாத்தியப்படுமா?

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பான கலந்துரையாடல்கள் பிரதமர் ரணிலின் ஜப்பான் பயணத்தின்போது முன்னெடுக்கப் படவுள்ளது. இதன் மூலம் கொரியாவில் இலங்கையர் பெற்றுக் கொள்ளும் வேலை வாய்ப்புகள் போன்று ஜப்பானிலும் இலங்கையருக்கான வேலை வாய்ப்புகளை தேடிக் கொள்ள முடியும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.

கணனி, தொலைத் தொடர்பு, மொபைல் போன்ற துறைகளில் இந்த தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் அதே நேரம், குறித்த துறைகளில் இலங்கையர் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஜப்பானில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.

இந்த நடவடிக்கைகளை தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிடல் கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் அமைச்சின் ஊடாக முன்னெடுக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுகுறித்து தொடர்புடைய முக்கியஸ்தர்களுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது ஜப்பானிய விஜயத்தின் போது கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
Loading...