|
கடும் மழையால் 18,000 இற்கும் மேற் பட்டவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சிலபகுதிகளில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளதுடன் வீதிகள் சிலவும் நீரில் மூழ்கியுள்ளதாக நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மழை குறைவடைந்துள்ள நிலையில் தாழ் நிலப் பகுதிகளில் நிரம்புயிருந்த நீர் வடிந்துவருவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
|
