கிழக்கில் தொழில் வாய்ப்புக்களுக்கு அவுஸ்திரேலியா நிதி உதவி
கிழக்கு மாகாணத்தில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்த அவுஸ்திரேலிய அரசு 20 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் கார்லோட்டே ப்ளண்டெல் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்த உயர்ஸ்தானிகர், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டை மட்டக்களப்பு ஈஸ்டலகூன் விடுதியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். குறித்த சந்திப்பின்போதே உயர் ஸ்தானிகர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மேற்படி சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் உயர்ஸ்தானிகர் கேட்டறிந்துள்ளார். அத்துடன், சட்டரீதியற்ற முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் நுழையும் இலங்கையர்களை தடுப்பதில் பாரிய பங்குளிப்பு செய்த இலங்கை பொலிஸாருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
