Sunday, 8 November 2015

13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தம் அவசியமானது: பைசர்முஸ்தபா

13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தம் அவசியமானது: பைசர்முஸ்தபா
13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தம்  அவசியமானது: பைசர்முஸ்தபா
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாவிட்டால் அவற்றை பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்திலிருந்து நீக்க வேண்டுமென உள்ளுராட்சி மன்றம் மாகாணசபைகள் அமைச்சர் பைசர்முஸ்தபா தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், காணி காவல்துறை அதிகாரங்களை வழங்கத் தயார் என சர்வதேச அரங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்து வந்ததாகவும், உள்நாட்டில் சிங்களப் பெரும்பான்மை மக்களின் அதிருப்தியை சம்பாதிக்கக் கூடும் என்ற அச்சத்தினால் காணி காவல்துறை அதிகாரங்களை வழங்க முடியாது என கூறி வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணி அதிகாரங்கள் மாகாணங்களுக்கு பகிரப்படுவதில் தமக்கு எவ்வித எதிர்ப்பும் கிடையாது என்ற போதிலும், காவல்துறை அதிகாரங்களை வழங்குவது குறித்து ஆராயப்பட வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...