விஜயதாஸ ராஜபக்ஷவிடம் நஷ்டஈடு கோருகிறார் பொன்சேகா
ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா, தன்னை அவமதித்தமைக்கு எதிராக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் இருந்து 5000 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார். மினுவான்கொட பகுதியில் இடம் பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந் நிலையில், விஜயதாஸ ராஜபக்ஷ அண்மையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தன்னை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாக பொன்சேகா இதன் போது சுட்டிக் காட்டியுள்ளார். இதே வேளை, முன்னதாக 500 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக விஜதாஸ ராஜபக்ஷ கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
