மட்டு. வைத்தியசாலையில் கடந்த 4 ஆண்டுகளில் 52,349 குழந்தைகள் பிறப்பு
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 52,349 குழந்தைகள் பிறந்துள்ளதாக வைத்தியசாலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதில்,சாதாரண பிரசவத்தினூடாக 34,207 குழந்தைகளும், சத்திர சிகிச்சை மூலம் 15,454 குழந்தைகளும், ஆயுதங்கள் பாவித்து 2,488 குழந்தைகளும் பிறந்துள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,2011 ஆம் ஆண்டு 11,206 குழந்தைகளும், 2012 ஆம் ஆண்டு 9,674 குழந்தைகளும், 2013ஆம் ஆண்டு 13,432 குழந்தைகளும், கடந்த ஆண்டு 12,103 குழந்தைகளும் பிறந்துள்ளன.
