திருமலை கடற்கரைகளில் அயலவகை மீன்கள் கரையொதுங்குகின்றது
திருகோணமலை நகரை அண்மித்த கடற்கரை பகுதிகளான வீரநகர், விஜிதபுர, மற்றும் திருக்கடலூர் ஆகிய பகுதிகளில் விசாலமான அளவு அயலவகை மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருந்து குறித்த வகை மீன்கள் திருகோணமலையின் பரவலான கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கியவாறு காணப்படுவதாக எமது செய்திகள் தெரிவிக்கின்றன.
டைனமைட் வெடி வைத்து மீன்கள் பிடிக்கப்படுவதால் பெருமளவிலான கடல் மீன்கள் கொல்லப்படுவதாகவும், இதன் காரணமாக மீன்கள் கரை ஒதுங்குவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளால் அப்பகுதியில் கடல் வளங்கள் அழிந்து வருவதாகவும், குறித்த செயற்பாடுகளின் காரணமாக சிறிய அளவில் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது. இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டம் என குறித்த பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
