Sunday, 29 November 2015

இதுவரையில் 44 பேர் டெங்குக் காய்ச்சலால் சாவு:சுகாதார அமைச்சு

இதுவரையில் 44 பேர் டெங்குக் காய்ச்சலால் சாவு:சுகாதார அமைச்சு
இதுவரையில் 44 பேர்  டெங்குக் காய்ச்சலால் சாவு:சுகாதார அமைச்சு
இந்த வருடத்தில் இதுவரையில் 44 பேர்  டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த இரு வாரத்தில் மாத்திரம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சின் தொற்று நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலத்தில் நிலவிய மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக இடங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 24,976 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விசேடமாக கொழும்பு மாவட்டத்திலேயே அதிகப்படியாக 8248 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Loading...