|
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதன் படி, 65 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும் பட்சத்தில், வடமாகாணத்தில் வீடில்லா பிரச்சினை தீர்க்கப்படும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் வீடுகள் இல்லை என்ற குற்றச்சாட்டை பலர் முன்வைக்கின்றனர். ஆனால் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் அளவுக்கு வடமாகாண சபையில் நிதி இல்லை.
இந்நிலையில் அரசாங்கம் அறிவித்துள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் அமுலாக்கப்படுமாக இருந்தால், இந்த வீட்டுப் பிரச்சினைகள் தீரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
|
Sunday, 1 November 2015
![]() |
65 ஆயிரம் வீட்டுத்திட்டம் அமுலாக்கப்பட்டால் வடக்கில் வீடில்லா பிரச்சினை தீரும் |
Loading...
