Sunday, 1 November 2015

பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து சிறிலங்கா – அமெரிக்கா பேச்சு














சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா அமெரிக்க உயரதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று முன்தினம் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு- மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான, முதன்மை பிரதி உதவிச் செயலர் பில் ரொட்டுக்கும், சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவுக்கும் இடையில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.
Loading...