எதிர்வரும் டிசம்பர் 08 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரப்) பரீட்சைக்கு ஆறு இலட்சத்து 64 ஆயிரத்து 537 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார். இவர்களுள் நான்கு இலட்சத்து 3 ஆயிரத்து 442 பேர் பாடசாலை விண்ணப்பதாரிகள் எனவும் இரண்டு இலட்சத்து 60 ஆயிரத்து 895 பேர் தனியார் பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
இம்முறை 4,670 பரீட்சை மத்திய நிலையங்களை அமைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு கடந்த வருடம் 4,279 பரீட்சை மத்திய நிலையங்களே இயங்கியதாகவும் தெரிவித்த அவர் இந்தமுறை ஆறு இலட்சத்து 64ஆயிரத்து537 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதோடு, கடந்த வருடம் ஐந்து இலட்சத்து 70ஆயிரத்து 409 பேரே (சாதாரண தரப்) பரீட்சைகளுக்கு தோற்றியிருந்தனர் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் 87,128 பரீட்சார்த்திகள் மேலதிகமாக தோற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
|
Thursday, 12 November 2015
![]() |
க.பொ.த. (சா/த) பரீட்சை 664,537 பேர் விண்ணப்பம் |
Loading...
27.08.2015 - Comments Disabled
02.06.2015 - Comments Disabled
28.03.2016 - Comments Disabled
29.06.2016 - Comments Disabled
10.06.2015 - Comments Disabled