|
தெற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக, சிறிலங்காவிலும் தென்னிந்தியாவிலும் வெள்ள ஆபத்து ஏற்படலாம் என்று காலநிலை தொடர்பான இணையத்தளம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் சிறிலங்காவுக்கு கிழக்கே உருவாகியிருக்கும் இந்த காற்றழுத்தம், தீவிரம் பெற்று, சிறிலங்கா மற்றும் தென்னிந்தியாவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், சிறிலங்காவிலும், தென்னிந்தியாவிலும், இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் வெள்ள ஆபத்து ஏற்படக்கூடும். இந்த காற்றழுத்தம் காரணமாக சிறிலங்கா முழுவதும் கடும் மழை மற்றும் சூறாவளிக் காற்றின் தாக்கம் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
|
Thursday, 12 November 2015
![]() |
சிறிலங்கா, தமிழ்நாட்டுக்கு வெள்ள ஆபத்து – வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் |
Loading...
