Wednesday, 4 November 2015

கறிவேப்பிலை தொக்கு

கறிவேப்பிலை தொக்கு

தேவையானப்பொருட்கள்:-

** கறிவேப்பிலை (இளசானது) – 2 கப்
** வெந்தயம் – 2 தேக்கரண்டி
** சீரகம் – 2 தேக்கரண்டி
** மிளகு – ஒரு தேக்கரண்டி
** உளுத்தம் பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
** கடலைப்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
** மிளகாய் வற்றல் – 10
** ஓமம் – ஒரு தேக்கரண்டி
** பெருங்காயப் பொடி – ஒரு தேக்கரண்டி
** நல்லெண்ணெய் – அரை கப்
** புளி – எழுமிச்சை அளவு
** உப்பு – தேவையான அளவு
        செய்முறை:-
01) கறிவேப்பிலையை ஆய்ந்து சுத்தம் செய்துக் கொள்ளவும். வாணலியில்
எண்ணெய் விடாமல் வெந்தயத்தை வறுத்து எடுக்கவும்.
A12594_01
02) இதேப் போல் மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய்வற்றல், ஓமம், ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்.
A12594_02
03) வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலையைப்போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
A12594_03
04) எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு உப்பு, புளி சேர்த்து அரைக்கவும்.
A12594_04
05) பிறகு வாணலியில் மீதிமுள்ள‌ நல்லெண்ணெயில் பாதியை ஊற்றி காய்ந்ததும் அதில் பெருங்காயப் பொடி மற்றும் அரைத்த விழுதைப்போட்டுவதக்கவும்.
A12594_05
06) கலவை பாதி வெந்ததும் மீதி எண்ணெயை ஊற்றி சுருளக் கிளறி எடுத்து வைக்கவும்.
A12594_06
சுவையான கறிவேப்பிலை தொக்கு தயார்
Loading...