வரவு செலவுத்திட்டம் தொடர்பில் தொழிற்சங்க நடவடிக்கை
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற் கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தி இது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் நவீன் சொய்சா இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்கள் எதிர்பார்த்த எந்தவொரு விடயமும் வரவு - செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
