Wednesday, 25 November 2015

வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும்: சோமவன்ச

வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும்: சோமவன்ச
 வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும்:  சோமவன்ச
மைத்திரி, ரணில் தலைமையிலான கூட்டு அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,மக்கள் மீது வரிச் சுமையை திணித்து, நாட்டை வெளி நாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள மைத்திரி – ரணில் தலைமையிலான கூட்டு அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும். 

நாட்டு மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் இவ்வாறான ஒரு வரவு செலவுத் திட்டதினை தோற்கடிக்க வேண்டும். எனவே நாட்டை நேசிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் நாட்டை பொருளாதார ரீதியில் வலுப்படுத்த உரிய திட்டமோ அல்லது முன்மொழிவுகளோ செய்யப்படவில்லை. மக்கள் மீது வரியை அதிகரித்து மக்கள் நீண்ட காலம் அனுபவித்து வந்த சலுகைகளை ரத்து செய்து நாட்டை அபிவருத்தி அடையச் செய்ய முடியாது தடுத்துள்ளது என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
Loading...