Wednesday, 18 November 2015

ஐ எஸ் இன் அடுத்த இலக்கு வொஷிங்டன்















பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடர் தாக்குதல் நடத்தியது போன்று வாஷிங்டனிலும் தாக்குதல் நடத்தப் போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். ஐ..எஸ்.ஐ.எஸ். இயக்கம் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு பிரான்ஸுக்கு ஏற்பட்ட நிலை தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்பைவிட வலிமை பெற்றுள்ளதால் தங்களின் வருகையை யாராலும் தடுக்க முடியாது என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த மிரட்டல் வீடியோ ஈராக்கில் பாக்தாத் வடக்கு பகுதியில் உள்ள சலாசுதீன் மாகாணத்தில் இருந்து வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை அழிக்காமல் ஓயப் போவது இல்லை என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
Loading...