Wednesday, 18 November 2015

பாரிஸில் அதிரடி நடவடிக்கை; சந்தேகநபர் இருவர் கொலை

Image copyrightAFP
பாரிஸில் சென்ற வாரம் 129 பேரை பலிகொண்ட பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படுபவரை இலக்குவைத்து பாரிஸின் புறநகர்ப் பகுதி ஒன்றில் அடுக்கு மாடிக் குயிருப்பு வீடொன்றில் ஆயுத பொலிசாரும் சிப்பாய்களுமாக அதிரடி வேட்டை ஒன்றை நடத்தியுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.
அதில் ஒருவர் பெண் என்றும் அவர் தன் மீது கட்டியிருந்த குண்டுகளைத் தானே வெடிக்கச் செய்துகொண்டார் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆண்கள் நால்வரும் பெண்ணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சட்ட நடவடிக்கை அதிகாரிகள் கூறுகின்றனர்.
சேன் தெனி பகுதியில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் பொலிசார் பலரும் காயமடைந்துள்ளனர்.
கடும் துப்பாக்கிச் சூடும் பெரிய வெடிப்புகளும் இந்த நடவடிக்கையின்போது நிகழ்ந்துள்ளன.
தேசிய விளையாட்டு அரங்கம் அமைந்துள்ள இடம் சேன் தெனி ஆகும்.
கடந்த வாரம் இடம்பெற்ற வன்செயல்களில் தேசிய விளையாட்டு அரங்கத்தில் மூன்று தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன.
காவல்துறையினர் தேடுதல்களை நடத்தி வரும் பகுதிகளில் சாலைகள் மறிக்கப்பட்டுள்ளன. ஏராளமான அவசர உதவி வாகனங்களும் காணப்படுகின்றன.
Loading...