சோபித தேரர் சிகிச்சை பலனின்றி சாவு
கோட்டை நாக விஹாரையின் விஹாராதிபதியும் சமூக நீதிக்கான இயக்கத்தின் தலைவருமான வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித தேரர் இன்று அதிகாலை காலமானார். நீண்ட நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த தேரர், கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய கடந்த 4ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தபோதும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை தமது 73ஆவது அகவையில் காலமானார்.
சிறந்த ஆன்மீகத் தலைவரான சோபித தேரர், நியாயமான சமூகத்தை உருவாக்குவதற்காக உயரிய தலைமைத்துவத்தை நல்கியவராவார். உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பௌத்த தர்மத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட மாதுலுவாவே சோபித தேரர், இனங்களிடையே சக வாழ்வினையும் ஒற்றுமையும் கட்டியெழுப்புவதற்காக பாடுபட்டவர்.
ஊழல் அரசியலை அடிக்கடி விமர்சனம் செய்துவந்த சோபித தேர்தல், கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக குரல்கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்து.