Tuesday, 17 November 2015

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் இலக்கு இலங்கையின் பக்கமும் திரும்பலாம் : ஞான­சார தேரர் எச்­ச­ரிக்கை

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் இலக்கு இலங்கையின் பக்கமும் திரும்பலாம் : ஞான­சார தேரர் எச்­ச­ரிக்கை
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் இலக்கு இலங்கையின் பக்கமும் திரும்பலாம் : ஞான­சார தேரர் எச்­ச­ரிக்கை
தற்­போது பிரான்ஸில் நடந்­து­வரும் ஐ.எஸ். இயக்­கத்தின் தொடர்­ச்சி­யான பயங்­க­ர­வாதத் தாக்கு­தல்கள் விரைவில்
இலங்­கையில் கொழும்பில் அல்­லது கிழக்கு மாகா­ணத்தில் உள்ள பிர­தே­சங்­களில் இடம் பெறலாம் என்று பொது­பலசேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் எச்­ச­ரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மதத்­தீ­வி­ர­வாத கற்கை நெறிகள் முஸ்லிம் மக்­க­ளுக்கு போதிக்­கப்­பட்டு அவர்­களை தீவிரவாதி­க­ளாக்­குவதன், பின் விளை­வு­களை முஸ்லிம் சமூகம் விரைவில் எதிர்­கொள்ள நேரிடும் எனவும் குர்­ஆனில் உள்ள இஸ்லாம் சார்ந்த அடிப்படை கோட்­பா­டுகள் தற்­போதைய நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மற்­றது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

தற்­போது கிழக்கு மாகா­ணத்தின் சில பகு­திகள் குரு­ணாகல் பர­கா­தெ­னிய பிர­தேசம், மாவனெல்லை மாளி­கா­வத்தை உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் மத­ரசா என்ற போர்­வையில் பல்­வேறு இஸ்­லா­மிய அமைப்­புக்கள் மதத் தீவி­ர­வா­தத்தை பரப்பி வரு­கின்­றன. இது எமது நாட்­டிற்கு எதிர்­கா­லத்­திற்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யலாம் ஐ.எஸ். அமைப்­பினை விடவும் கொடூ­ர­மான அமைப்­புக்கள் உரு­வாகும் சாத்­தியம் உள்­ளன.

இந்­நி­லையில், தற்­கா­லத்தில் ஐரோப்­பி­ய­நா­டு­களில் வாழும் இளை­ஞர்கள் பலர் ஐ.எஸ் இயக்­கத்தின் பக்கம் ஈர்­க்கப்­ப­டு­கின்­றனர். இவர்கள் தாம் தீவி­ர­வாத அமைப்பில் உள்ளோம் என தமது பெற்­றோ­ருக்கும் அறி­விப்­ப­தில்லை. இவர்கள் அல்லாஹ் என்று இறை­வனின் பெயரை கூறி­விட்டு எந்த தவ­றையும் துணிந்து செய்­கின்­றனர். இந்­நி­லையில் மாற்றம் ஏற்பட வேண்­டு­மாயின் முஸ்லிம் சமூ­கத்தில் பொறுப்­பு­ணர்வு உள்­ள­வர்கள் அமைதி களைய­ வேண்­டி­யது அவ­சியம் என்று தெரிவித்தார்.

Loading...