Tuesday, 17 November 2015

பாதிக்கப்பட்ட வட பகுதி மக்களுக்கு படையினர்களின் உதவிக்கரம்!













சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வன்னி மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் 700 க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்துக்குட்பட்ட பள்ளியாறு, வண்ணிக்குளம், மண்டகலாறு, பண்ணங்கண்டி,நெடகலியாறு பகுதிகளிலும், முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையகத்துக்குட்பட்ட முதியகட்டு பகுதியிலும், வன்னி பாதுகாப்பு தலைமையகத்துக்குற்பட்ட கொக்கிலாய், ஜானக புர, வெலி ஓய, புல்மோட்டை பகுதிகளிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 5000 மக்களுக்கு படையினர், சமைத்த உணவு, மருத்துவ உதவி, சுகாதார மற்றும் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தல் மற்றும் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுதல் தொடர்பான விடயங்களிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

கிளிநொச்சி மாவட்டச் செயலாளரின் ஆலோசனையின் பேரில் உமயகபரம் வித்தியாலயம், குமரன்புரம் வித்தியாலயம், பொட்டுவாடு வித்தியாலயம், ஆனந்த குளம் வித்தியாலயம் மற்றும் ஶ்ரீ முருகண்டி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 4200 பேருக்கான குடிநீர், சவர்காரம், பாய்கள், தலையணைகள் போன்ற பொருட்களுடன் கூடிய அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது. 
Loading...