Thursday, 12 November 2015

அமெரிக்காவில் பறக்கும் தட்டைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் வேற்று கிரகவாசி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், அடையாளம் தெரியாத பறக்கும் தட்டைப் பார்த்ததாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மக்கள் பலரும், புகார் அளித்தனர்.
இதனை அடுத்து, இம்மாநிலத்தின் சான் ஜோஸ் நகரைச் சேர்ந்த ஜியன்னா பெபோனிஸ் என்ற பெண்ணின் தோட்டத்தில் அருவருக்கத்தக்க விதத்தில் உள்ள ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது.
இரவு பதினொன்றரை மணியளவில், பயங்கரமான அலறல் சத்தத்தைக் கேட்ட ஜியன்னா ஓடி வந்து பார்த்தபோது, இந்த அருவருக்கத்தக்க உடல் தனது தோட்டத்தில் கிடந்ததாக சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
சிலர் இந்தப் புகைப்படத்தில் இருந்தது, வனவிலங்கால் கொல்லப்பட்ட மானின் கருவாக இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். எனினும், பறக்கும் தட்டு மற்றும் வேற்றுக் கிரகவாசிகளை நம்பும் பலரும் இது ஒரு வேற்றுக் கிரகவாசியாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
alliens_photo
usa

Loading...