|
1988-89ம் ஆண்டுகளில் காணப்பட்ட இருண்ட யுகம் நாட்டில் மீளவும் ஏற்பட இடமளிக்கப்படக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.குறித்த காலப் பகுதியில் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி என்ற ரீதியில் இளைஞர், யுவதிகளுக்கு என்னால் முடிந்தளவு சேவை செய்திருந்தேன்.
நாட்டில் நிலவிய இருண்ட பயங்கரமான சூழ்நிலைகளுக்கு எதிராக நாம் பாத யாத்திரை சென்றோம், மனித சங்கிலி போராட்டம் நடத்தினோம், போராட்டங்களை நடத்தினோம், கோசங்களை எழுப்பினோம். இடம்பெற்ற அநீதிகளை நாட்டுக்கே வெளிப்படுத்த நடவடிக்கை எடுத்தோம். அன்றைய காலப்பகுதியில் இடம்பெற்ற மனித படுகொலைகள் தொடர்பில் சாட்சியங்களை திரட்ட முடியவில்லை.
மாணவர் படுகொலைகள் தொடர்பிலான சூழச்சித் திட்டங்கள் அடிப்படையில் நீதவான் சந்திரதாச நாணயக்கார தண்டனை விதித்தார்.சாட்சியங்களை திரட்ட முடியாமை குறித்து அவர் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இருண்ட யுகம் தொடர்பில் நாம் மன வேதனை அடைகின்றோம்.
அம்பிலிப்பிட்டி மத்திய மஹா வித்தியாலயம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருண பிரியங்கர அந்தோனாவ என்னும் நூலை எழுதியுள்ளார்.
இந்த நூல் மிகுந்த அர்ப்பணிப்புடன் எழுதப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.1988-89ம் ஆண்டு காலப்பகுதியில் அம்பிலிபிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற மாணவர் மற்றும் இளைஞர் காணாமல் போதல் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட அந்தோனாவ என்னும் நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
|
Thursday, 12 November 2015
![]() |
இருண்ட யுகம் மீளவும் ஏற்பட இடமளிக்கப்படக் கூடாது--மஹிந்த ராஜபக்ச |
Loading...
