Monday, 2 November 2015

உலகத் தமிழர் பேரவை மீதான தடை நீக்கப்படும் சாத்தியம்

உலகத் தமிழர் பேரவை மீதான தடை நீக்கப்படும் சாத்தியம்
உலகத் தமிழர் பேரவை மீதான தடை நீக்கப்படும் சாத்தியம்
உலகத் தமிழர் பேரவை மீதான தடை நீக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவேலுக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவரது வருகையுடன் பேரவை மீதான தடையும் நீக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த அரசாங்கம் 17 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும், 400 தனிப்பட்ட நபர்களையும் கறுப்புப் பட்டியலிட்டு தடை செய்துள்ளது. இதில் உலகத் தமிழர் பேரவையும் அதன் தலைவர் இமானுவேல் அடிகளாரும் உள்ளடங்குகின்றனர்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்ட தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் மீதான தடை குறித்து வெளிவிவகார அமைச்சு மீளாய்வுசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading...