நிலங்கள் மீண்டும் வழங்கப்பட வேண்டும்
மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். இதனை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் என்று ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது.
ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட நாளை நினைவுகூர்ந்து ஹஸ்புல்லா என்பவரின் நூல் எலியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டபோதே, அநுரகுமார பிரதம அதிதியாக பங்கேற்று உரையாற்றினார்.
இதன்போது கருத்துரைத்த அவர், வடக்கில் படையினரால் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் வழங்கப்படும்போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
மேலும், நிலச் சொந்தக்காரர்களுக்கு தமது நிலங்களின் உரித்து மாத்திரமல்லாமல், அந்த நிலத்தில் மாறாத உறவும் இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.நாட்டில் தற்போது போர் முடிவடைந்துள்ள நிலையில், அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் அவசியமற்றவை என்றும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
