எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவுடன் இணைந்து தேர்தலுக்கு முகங்கொடுக்கப் போவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு சகல கிராமங்களையும் உள்ளடக்கி புதிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த வேலைத்திட்டம், இம்மாதம் முதலாம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் உள்ள 10 அரசியல் கட்சிகள் மற்றும் வெளியில் உள்ள கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியில் போட்டியிட, பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் கூறினார்
|