|
யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் தவறுகளுக்கும், குற்றங்களுக்கும் தண்டனை வழங்குவதன் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடாந்து குறிப்பிட்ட அவர், இலங்கையில், 30 வருடங்கள் யுத்தம் இடம்பெற்றதாகவும், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் மற்றும் அனைத்து செயற்பாடுகளும் சட்ட ரீதியாக நடைபெற்றிருக்காது என்றும் கூறினார்.
இந்த யுத்தத்தின் காரணமாக இராணுவத்திற்கோ, ஆட்சியாளர்களுக்கோ, அல்லது போர் செய்தவர்களுக்கோ தண்டனை விதிப்பதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் மேலும் கூறினார்
|
Friday, 6 November 2015
![]() |
தவறுக்கு பதில் தண்டனையென்றால் நாடு முன்னேற்றமடையாது -அமைச்சர் திஸ்ஸ |
Loading...
