Sunday, 1 November 2015

அடைமழையால் மக்கள் இடம்பெயரும் அபாயம்

அடைமழையால் மக்கள் இடம்பெயரும் அபாயம்
அடைமழையால் மக்கள் இடம்பெயரும் அபாயம்
யாழ்.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக யாழ் நகர்ப்பகுதியை அண்மித்த நித்திய ஒளி, வசந்தபுரம், சாமிநகர் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன் மக்கள் இடம்பெயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் தமது உடமைகளை பாதுகாத்துக் கொள்வதில் சிக்சல் நிலை ஏற்பட்டுள்ளதுடன், நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெள்ள நீரினால் பல்வேறு சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகின்றது.

குறிப்பாக மலசல கழிவுகள் வெள்ள நீருடன் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், வெள்ள நீரை அகற்ற உதவுமாறும், தமக்கான அத்தியாவசிய உதவிகளையாவது வழங்கிவைக்குமாறும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தமக்கு வெள்ள நிவாரணம் மற்றும் வெள்ளத் தவிர்ப்புப் பொருட்களை தந்துதவுமாறும் அம்மக்கள் அரச அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading...