ஜனாதிபதி தாய்லாந்து நோக்கிப் பயணம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 07.30 மணியளவில் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.882 ரக விமானத்தில் தாய்லாந்து நோக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புறப்பட்டு சென்றுள்ளார் எனக் குறிப்பிடப்படுகின்றது.
ஜனாதிபதியுடன் 60 பேர் அடங்கிய குழுவொன்றும் தாய்லாந்து நோக்கி சென்றுள்ளது. அந்த நாட்டு பிரதமரின் விசேட அழைப்பிற்கமையவே நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்து நோக்கி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
