நிதிக் குற்றவியல் விசாரணைகள் ஆரம்பம்
தேசிய அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் தொடர்பிலும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தேசிய அரசாங்கத்தின் சில அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
குறித்த அமைச்சர்களின் தொகுதிகளில் அமைந்துள்ள பிரதேச செயலகங்கள், நகரசபைகள், பிரதேச சபைகள் போன்றவற்றில் இவர்களினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி, பதுளை, குருணாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்கள் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
