கொழும்பு மருதானை டெம்பல் வீதி இலக்கம் 198 என்றமுகவரியில் இயங்கும் குயீசின் நிறுவனம பாடசாலை செல்லும் வசதி குறைந்த மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் போன்றவற்றையும் இலவசமாக வழங்க முன்வந்துள்ளது
இத் திட்டத்தின் முதற் கட்டமாக வசதி குறைந்த மாணவர்களுக்கு ஒரு தொகை அப்பியாச கொப்பிகளும் பாதணிகளும் அண்மையில் வழங்கப்பட்டன. குயீசின் நிறுவன பணிப்பாளர் பாத்திமா ஸசீனாபாயிஸ் மேற்படி உதவிப் பொருட்களை மாணவன் ஒருவருக்கு வழங்குவதை படத்தில் காணலாம்.
இதே மேற்படி நிறுவனத்தின் அனுசரணையுடன் குடும்பப் பெண்களுக்கான இலவச ஆங்கில் மொழிவகுப் பொன்று நடைபெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது
தகவல்:- நூருல் அயின் நஜ்முல் ஹ{சைன்

