நாடு செழிப்படைய வேண்டும் என்றால் ,மக்கள் வாழ்க்கைச் செலவு குறைக்கப் பட வேண்டும் என்றால் அரச ஸ்தாபனம்கள் நஷ்ட்டம் அடைவதை தவிர்க்க அதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். வருடா வருடம் பல கோடிகளை இழக்கும் அரச ஸ்தாபனம்கள் அறிவும் அனுபவும் பெற்றோரால் நிர்வகிக்கப் பட வேண்டும் .பேரளவில் அரசியல் வாதிகளை அங்கொன்றும் இங்கு ஒன்றுமாகத் தூவி விடுவதை நிறுத்த வேண்டும்
தனியார் துறைக் கம்பனிகள் லாபத்தைக் கொட்டி அதில் அரசாங்கத்துக்கு வரியை அள்ளி இறைக்கிறது , அதே நேரம் அரசாங்க ஸ்தாபனம்கள் நஷ்ட்டம் அடைந்து அதை அடைக்க வரிப் பணத்தை சுருட்டி எடுக்கிறது. இந் நிலைமை ஏற்படக் காரணம் என்ன ?
தனியார் துறைக் கம்பனிகள் அத் துறைசார் அறிவும் அனுபவமும் பெற்றோரால் நிர்வகிக்கப் படுகிறது ,ஆனால் அரச ஸ்தாபனம்கள் அத்துறைசார்பு அறிவில்லா அனுபவம் இல்லாதவர்களை நிர்வகிக்க தேர்வு செய்கிறது .
இறுதியில் இதன் தாக்கம் மக்கள் மீது வரிச்சுமை , இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஸ்தாபகர் மொஹிடீன் வாவா கூறினார்

