Tuesday, 8 December 2015

எதிர்வரும் ஜனவரியில் கிழக்கில் 100 புதிய வைத்தியர்கள்










கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் 100 வைத்தியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீர் தெரிவித்தார். 

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயத்தை மேற்கொண்டு அங்கு நிலவுகின்ற குறைபாடுகளை கேட்டறிந்த பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், 'காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிரின் கோரிக்கைகளுக்கமைய எதிர்வரும் ஆண்டில் இவ் வைத்தியசாலைக்கு மகப்பேற்று நிபுணர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுப்பதுடன், சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான புதிய உபகரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன். இதேவேளை, இங்கு நிலவுகின்ற ஆளணி பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கான முன்னெடுப்புக்களையும் மேற்கொள்வேன்' எனவும் அவர் தெரிவித்தார்.
Loading...