Tuesday, 8 December 2015

முக்கிய பரீட்சைகள் செவ்வாய்க்கிழமைகளில் ஆரம்பிப்பது ஏன்? விளக்கம் எம்.பி புத்திக்க பத்திரண













நாட்டின் முக்கியமான பரீட்சைகள் பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் ஆரம்பிக்கப்படுவதற்கான காரணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண விளக்கியுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் ஆகிய பரீட்சைகள் செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்படுகின்றன.

வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமைகளில் பரீட்சை நடத்தப் படுவதில்லை. திங்கட்கிழமை ராகு காலம் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதன் காரணமாகவே செவ்வாய்க்கிழமைகளில் தேசிய பரீட்சைகள் நடத்தப்படுகின்றன.

இந்த விடயம் குறித்து பரீட்சைகள் ஆணையாளரிடம் நான் வினவியிருந்தேன்.

பொதுவாக திங்கட்கிழமைகளில் காலை 7.30 முதல் 9.30 வரையில் ராகு காலம் காணப்படும். இதனால் பரீட்சைகளை திங்கட்கிழமைகளில் தொடங்க வேண்டாம் என பெற்றோர் தம்மிடம் கோருகின்றனர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எனக்கு விளக்கம் அளித்தார்.

எமது காலத்தைப் போன்று அல்ல தற்போது பரீட்சைகள் ஆணையாளருக்கும் பெற்றோரின் அழுத்தங்களுக்கு அடி பணிய நேரிட்டுள்ளது.

நவீன உலகம் என்றாலும் இவ்வாறான விடயங்கள் நடைபெறுகின்றன என புத்திக்க பத்திரண நாடாளுமன்றில் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.


Loading...