Tuesday, 1 December 2015

பேருந்துக் கட்டணத்தை அதிகரிப்போம்: தனியார் பேருந்து சங்கங்கள்

பேருந்துக் கட்டணத்தை அதிகரிப்போம்: தனியார் பேருந்து சங்கங்கள்
 பேருந்துக் கட்டணத்தை அதிகரிப்போம்: தனியார் பேருந்து சங்கங்கள்
தனியார் பேருந்துத் துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சேவைக் கட்டணம், அதிகரிக்கப்பட்ட வரிப்பணம் மற்றும் புதிய வரி முறைமை ஆகியவற்றை இரத்துச் செய்யாவிடின், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல், தனியார் பேருந்துக் கட்டணத்தை 6 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளதாக, தனியார் பேருந்து சங்கங்கள் அறிவித்துள்ளன.

இது குறித்து அச்சங்கங்கள், பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு எழுத்தியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளன.

புகைப்பரிசோதனைக் கட்டணம், வரவு- செலவுத்திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதோடு, புதிய வரிகளை அறிமுகம் செய்தமையால், பேருந்துகளை இறக்குமதி செய்யும் போது பேருந்தொன்றுக்கு 25 இலட்சம் ரூபாய், வரியாகச் செலுத்தவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி45 இலட்சம் ரூபாய் பெறுமதியானபேருந்தைக் கொள்வனவு செய்தால், அதற்கு 75 இலட்சம் ரூபாயைச் செலுத்தவேண்டியுள்ளது என்றும் அச்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
Loading...