|
வடமாகாணத்தின் காணி தொடர்பான ஆய்வறிக்கை வெளியீடும், நாமும் நிலமும் எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடலும் நடைபெற்றது. மாற்றத்திற்கான அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
வடமாகாணத்தின் காணி தொடர்பான ஆய்வறிக்கையினை வெளியிடும் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டு காணி தொடர்பாக வடமாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அரசாங்கத்தின் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் குறித்து உரையாற்றினார்.
ஆதன்பின்னர் மாற்றத்திற்கான அமைப்பினரால், வடமாகாண காணி தொடர்பான ஆய்வறிக்கை வடமாகாண முதலமைச்சருக்கு வழங்கி வைக்கப்பட்டது. ஆதனைத் தொடர்ந்து, வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் உட்பட சுவிஸ் தூதரக அதிகாரிகள் மற்றும் சுவிஸ் அபிவிருத்தி திட்ட இணைப்பாளாகளுக்கும் அறிக்கை வழங்கி வைக்கப்பட்டன. இந்த கலந்துரையாடலில், வடமாகாண காணி ஆணையாளர் மற்றும் அரசம ற்றும் தனியார் துறை அதிகாரிகள், வலி வடக்கு மீள்குடியேற்ற குழுக்களின் தலைவர்கள், முஸ்லீம் பிரதிநிதிகள் எனப்பலர்கலந்துகொண்டனர்.
இந்த கலந்துரையாடலில், வடமாகாண மக்கள் எதிர்நோக்கும் காணி பிரச்சினைகள் மற்றும் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள், மற்றும் யுத்தத்தின் பின்னரான மீள்கட்டமைப்பு, மீளிணக்கம், உட்பட , பல விடயங்கள் அந்த ஆய்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டன. ஆதன்பின்னர் காணி தொடர்பாக வடமாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.
|
Tuesday, 1 December 2015
![]() |
யாழில் நாமும் நிலமும் எனும் தொனியில் கலந்துரையாடல் |
Loading...
