அண்மைக்காலமாக இந்திய மற்றும் இலங்கை பத்திரிகை, வாணொலி, இணையதளங்கள் என்று சாதனை படைத்து வரும் பிரபலமான எழுத்தாளரை. அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.அந்த வகையில் இலங்கை கொழும்பை சேர்ந்த பாத்திமா சிமாரா அவர்களுடன் ஒரு் சிறப்பான நேர்காணல்
கேள்வி : உங்களை பற்றி ஒரு சிறிய அறிமுகம் தாருங்கள் ?( பெயர் , ஊர் , படிப்பு , வேலை )
எனது பெயர் ஸிமாரா.எனது சொந்த ஊர் கண்டி அக்குறணை.படித்து கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி ,1வருடம் மடவல மதீனா மத்திய கல்லூரியில் கற்றேன்.சாதரண தரம் உயர் தரம் எல்லாம் கொழும்பில்தான். தற்போது கொலொன்னாவையி வசிக்கிறேன்.கணவர் அலி உல் அக்பர்.5 பிள்ளைகள் உள்ள சாதாரண பெண்.கணவரின் நிறுவனத்தில் உப்பு முகாமைத்துவராக இருக்கிறேன்
கேள்வி : கவிதை எழுதும் ஆர்வம் எப்போது தோன்றியது?
பதில் : கவிதை எழுதும் ஆர்வம் பதின்மூன்று வயதில் இருந்து இருக்கிறது
கேள்வி : உங்களை கவிதை எழுத தூண்டிய ஒரு காரணி ?
பதில் : என் தந்தை சொல்வார் அவருடைய முப்பாட்டன் அப்துல் காதிர் (வித்துவ தீபம்) அதன் மூலம்தான் என்பார்.ஆனால் சரியா என்பது எனக்கு தெரியாது.
பதில் : என் தந்தை சொல்வார் அவருடைய முப்பாட்டன் அப்துல் காதிர் (வித்துவ தீபம்) அதன் மூலம்தான் என்பார்.ஆனால் சரியா என்பது எனக்கு தெரியாது.
கேள்வி : நீங்கள் எழுதிய முதல் கவிதை ஞாபகம் இருக்கிறதா?
பதில் :இலவசமாய் ஓர் இன்னிசை கச்சேரி ஓட்டுகள் கூரையில் மழைத்துளிகள்
கேள்வி : உங்கள் கவிதையை படித்து முதலில் நன்றாக இருக்கின்றது என்று பாராட்டியது யார் ?
பதில் :மடவல மதீனா என் ஆசிரியை திருமதி .ஷுஹீரா நுஷ்ரி அவர்கள்.
கேள்வி : உங்களுக்கு எப்டியான கவிதைகள் எழுத பிடிக்கும்?
பதில் :அனைத்து மாதிரியும் எழுத வேண்டும் என்பது என் ஆசை
கேள்வி : நீங்கள் எழுதிய கவிதை வரிகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கவிதை ஏதாவது (நேயர்களுக்காக)?
பதில் : பெண் எனும் சிறை
உணர்வற்றுப்போன எச்சங்கள் அல்ல,
சதைகளாலான மனிதம்தான் நாமும்….
லஜ்ஜைகளயற்ற சிலர் குற்றத்தின் பலனாய்
குற்றங்கள் இல்லா நாம் கூண்டுக்குள்
உள்ளோம்….!
விதை விட்டு நாம் ஒளி காணும் வேலை
பழிசொல்லி எம்மை
மண்ணுக்குள் புதைக்கும் பொல்லாத உலகம்!
மனம் பேணா மோகினிகளால்
பக்கத்து தேவதையும் காட்டேரிதான்,
காமாலை கண்களுக்கு…!!
காயங்கள் பலவெனினும் நாம் தாங்கிக் கொள்வோம்…
நம் கற்பதை சாடினால் நாம் என்ன செய்வோம் ?
பெண்ணென்று எம்மை
உள்வைளத்து மூட
உன் வன்மங்கள்தானே பூட்டானது..!!
கூத்தாடி பின்சென்று நீ வந்த போதும்
எம் பேனுதல் ஒருபோதும் பறிபோவதில்லை…
ஆண் செய்த குற்றங்கள் வான்தொட்ட போதும் பொய்,
குற்றங்கள் சொல்கிறான் நாம் அதை கேட்கும்போது….!
குற்றமற்ற ஆசையும் இங்கு ஆயுள் கைதியாய் இருக்க….,
சீதைகளை ராமன்கள் சிறை வைத்துள்ளார்…
யாரே செய்த குற்றத்தின் கைதிகளாய்….!!
கேள்வி : நீங்கள் தொடர்ந்து கவிதை எழுத காரணமாக இருப்பது என்ன அல்லது யார் ?
பதில் : என் கணவர் அலி உல் அக்பர் அவர்தரும் சுதந்திரத்துடன் கூடிய பாதுகாப்பு .மற்றும் சகோதரி கலை மகள் ஹிதாயா ரிஸ்வி.கலம் அமைத்துத்தந்தார் .
கேள்வி :உங்கள் கவிதைகளுக்கு கிடைத்த மிக பெரிய பாராட்டு அல்லதுபரிசு?
பதில் : வாசகர் விருப்புகள் அதிகம் என் கவிதைகளும் .அதை விட விருதுகள் கிடைத்ததில்லை.
கேள்வி :எழுதுவதற்கென குறித்த நேரம் வைத்துள்ளீர்களா ? அல்லது தோன்றும் போது குறித்து வைத்துக் கொள்வீர்களா ?
பதில் : தோன்றும் போது எழுதுவேன் .அது எந்த நேரமாயினும்.
கேள்வி : கவிதைப் பயணத்தில் உங்களைப் பாதித்த கவிஞர்கள் (தமிழில்) யார்? ஆதர்சம் (inspiration) என்று சொல்லுமளவு யாரேனும் ? Any Foreign Poets ?
பதில்:திரு.அஷ்ரப் ஷிஹாப்தீன், தி்ரு மானா மக்கீன் அவர்கள் ஆரம்பகாலத்தில் நிறைய ஊக்கம் வழங்கியவர்கள்
கேள்வி : சமகாலக் கவிஞர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள்?
பதில் : நிறைய உண்டு ஒருவரை சொன்னால் மற்றவர் மனம் வருந்தும்
கேள்வி :'கவிதைக்கான கருவை முன் கூட்டியே திட்டமிடுவதில்லை; கவிதை தானாகவே உருவாகிறது அல்லது நேர்கிறது ' இதற்கு அர்த்தம் என்ன ? கவிதை ஆக்கத்தில் பிர்க்ஞை பூர்வமான உழைப்பு தேவையில்லை என்பதா ?
பதில் : உணர்வு பூர்வமான உழைப்பு கட்டாயம் தேவை
கேள்வி : குறிப்பாகச் சொல்லுங்கள். கவிதை எழுதுவதற்கு முன்னால் மனதில் விஷயமே இருக்காதா?
பதில் : இருக்காது எனக்கு
கேள்வி : உங்களுக்கு சினிமாவில் பாடல் எழுதும் சந்தர்பம் வந்தால் எழுதுவீர்களா?
பதில் : கணவர் சம்மதத்துடன் எழுதுவேன்
கேள்வி : உங்கள் கவிதையைக் கொண்டு நீங்கள் மாற்ற அல்லது சாதிக்க விரும்புவது ?
பதில் : சமூகத்தில் வெளிவராத உண்மைகள் உணர்வுகள்
கேள்வி : மரபு, புதுக் கவிதைகளைத் தாண்டி பின் நவீனக் கவிதைகள் இப்பொழுது எழுதப்படுகின்றன. அவை பற்றிய உங்கள் புரிதல் எப்படி?
பதில் : மரபுகவிதை மிக அழகு ஆனால் அதை எல்லோராலும் புதிதல்ல கடினம் .புதுக்கோட்டை கவிதைகள் சாதாரண மக்களையும் கவரக்கூடியது.
கேள்வி : வாழ்கையின் இலக்கு என்ன?
பதில் : என் எழுத்துப்பணியில் நல்லதை படைக்க வேண்டும் .அத்துடன்,என் 5குழந்தைகளையும் நல்ல நிலைக்கு கொண்டுவருபதுடன் அவர்கள் எல்லா மொழியிலும் கவி படிக்க வேண்டும்.
கேள்வி : இத்துறையில் சாதிக்க விரும்பும் இளம் வயதினருக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்?
பதில் : இப்போது எல்லோரும் அனைத்தும் நன்கு தெரிந்தவர்கதான் அதிகம் .யாரையும் பின்பற்றாது தனக்கு எது வருமோ அதைதான் எழுத வேண்டும் .அப்போதுதான் நல்ல படைப்புகள் வரும் .
கேள்வி : உங்கள் அடைவுகளுக்கு குடும்பத்தினர் எவ்வாறு ஊக்கம்அளித்தனர்.
பதில் : என் வேலைகளை பகிர்வதுதான்.
கேள்வி :இளம் வயதில் சிலஅடைவுகளை தொட்டுவிட்டீர்கள். இதற்கு திறமை தவிர வேறு எது காரணங்கள் இருக்கின்றனவா?
பதில் : அல்லாஹ்வின் கிருபை
கேள்வி :இலங்கைக் கலைஞர்களை இலங்கை இரசிகர்கள், வாசகர்கள் வரவேற்பளிப்பதில்லை என்ற விமர்சனம் குறித்து உங்கள் கருத்து?
பதில் : அது தவரு.நிறைய ஆதரவு உண்டு சரியான பாதையில் தெளிவாக பயணித்தால்.
என்னிடம் பலரும் கேட்கும் ஒரு கேள்வி ஊதாப்பூ என்றால் என்ன ?ஆரம்பத்தில் நான் எழுதும்போது என் தாயார் என் பெயரை வெளியிட அனுமதிக்கவில்லை.அதனால் அடம்பன் கொடியின் பூ ஊதா நிறம் அதுமட்டுமின்றி பல அரிய மூலிகைகளின் நிறம் ஊதா அதனால் என்னுடைய படைப்புகளும் அரிய மருந்துபோல் இருக்க இப்படி பெயரை நான் புனைப்பெயராக தேர்ந்தெடுத்தேன்.
பேட்டி கண்டவர் : கற்பிட்டியின் குரல் நிருபர் முகமது ஜீஸான் அசீர்


