இலங்கையின் கிராமங்கள் தோறும் விவசாயத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் நமது நாடு உணவுப் பொருட்கள் இறக்குமதியைக் குறைத்து நாட்டில் தன் நிறைவு அடைய முடியும்.
இந்த நோக்கம் நிறைவேற்றப் படவேண்டுமாயின் விவசாய உற்பத்திக்காக பல திட்டங்கள் தீட்டினால் மட்டும் போதாது அதன் மூலப் பொருளான மூலதனம் வேண்டும். மூலதன குறை பாட்டால் எத்தனையோ விவசாய நிலங்கள் சாகுபடி அற்றுக் கிடக்கின்றது.
ஆகவே அரசாங்கம் இந்த நோக்கத்திற்காக தனிப்பட ஒரு வங்கி அமைப்பை உருவாக்க வேண்டும்.இதனை GREEN BANK என்ற பெயரில் அமைக்கப் படலாம். இவ் வங்கிகள் நமது நாடு தோறும் இலகுவான முறையில் விவசாயிகள் கடன் வசதிகளைப் பெறும் வகையில் குறைந்த வட்டி வீதத்தில் வழங்குவதின் மூலம் அவர்களை ஊக்குவிக்க முடியும் .
விவசாயம் என்பது நெற்பயிர் செய்கை மட்டுமல்ல சகலவிதமான விளை நிலப் பொருட்கள் என்பன அடங்கும், இதை ஆக்க பூர்வமான முறையில் நடை முறைப் படுத்த வேண்டுமாயின் இதில் விவசாயத் திணைக்களம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்
இவ்வாறன யோசனையினை தேசிய ஜனநாயகக் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா உரிய அதிகாரிகளுக்கு எத்தி வைக்கவுள்ளார்

