Thursday, 24 December 2015

எம்.பிக்கள் - மாகாண சபையினர் சந்திப்பை உடனே நடத்துங்கள்! - சம்பந்தனிடம் கோரிக்கை!














மாகாண சபையினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பை உடனடியாக நடத்துமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் சென்று வலியுறுத்தியுள்ளனர்.

வடக்கு மாகாண சபையின் வரவு - செலவுத் திட்டம் மற்றும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத்தலைமையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பாகவும் கலந்துரையாடுவதற்கே இந்தச் சந்திப்பை உடனடியாக ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண சபையின் ஒரு தொகுதி உறுப்பினர்கள், நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கொழும்புக்குச் சென்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின்போது வடக்கு மாகாணசபையின் வரவு - செலவுத் திட்டம் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது. அமைச்சுக்களுக்கு ஒதுக்கிய நிதி உரியமுறையில் செலவு செய்யப்படாமல் உள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
Loading...