Thursday, 24 December 2015

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதி மும்முரம்!















இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மும்முரம் காட்டி வருகின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.


தனக்குக் கீழ் இயங்கிவரும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அமைச்சு அதிகாரிகளை நேற்றைய தினம் அழைத்து இது தொடர்பில் விசேட பேச்சில் அவர் ஈடுபட்டார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, அமைச்சின் செயலாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம்.ஸுஹைர் உள்ளிட்ட சிலர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர் என்று கூறப்படுகின்றது.



இதன்போது, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்தும், தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.



இவை தொடர்பில் எதிர்வரும் ஜனவரி 4ம் திகதி மீண்டும் சந்திப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகின்றது.


Loading...