உணவு ஒழுங்கு குறித்து சுற்றறிக்கை
வைத்தியசாலைகள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகளில் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்ற போது குறித்த உணவுப் பொருட்களில் ஒழுங்கு முறையொன்றை கடைப்பிடிக்கும் வகையிலான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படவுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளர்களில் 65 சதவீதமானவர்கள் தொற்றா நோய்கள் காரணமாகவே மரணிக்கின்றனர். இந்த நிலையிலேயே சுற்றறிக்கை தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
