கோரிக்கைகள் தொடர்பில் இணக்கம்
தமது கோரிக்கைகள் தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது பிரச்சினைகள் தொடர்பில் பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கம் எட்டப்பட்டதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் பிரதமருக்கு தெரியப்படுத்துவதாக அந்த குழு வாக்குறுதியொன்றையும் வழங்கியுள்ளதாக சங்கத்தின் இணைப்பாளர் தம்மிக முனசிங்ஹ தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டில் இருந்து தொழில்வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவது உற்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து முன்னர் பிரதமருடன் ஆராயப்பட்டது. அதனை அடுத்தே இந்தக் குழு பிரதமரினால் நியமிக்கப்பட்டது.
