Thursday, 24 December 2015

எரிபொருள் விலைக் குறைப்பால் மக்களுக்கு நன்மையில்லை காராணம் !விஜித ஹேரத்














உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைந்துள்ள போதிலும் அதன் நன்மையை நாட்டு மக்களுக்கு வழங்க அசமந்தப்போக்கு கடைப்பிடிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை ஜே.வீ.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் முன்வைத்துள்ளார். இதன் மூலம் பெறப்படும் இலாபத்தை கருத்திற் கொண்டே எரிபொருட்களுக்கான நிர்ணய விலை அறிமுகப் படுத்தப் படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள மசகு எண்ணெய் விலைக்குறைப்பின் நன்மையை இன்னும் நாட்டு மக்களுக்கு அரசாங்கம் வழங்கவில்லை. 59 ரூபா 39 சதத்திற்கு கொண்டு வரப்படும் பெற்றோல் லீற்றர் ஒன்றின் மீது அரசாங்கம் 54 ரூபா 41 சதம் வரியை அறிவிடுகிறது. அத்துடன் 79 ரூபாவிற்கு டீசலை விற்பனை செய்ய முடியும்.

எனினும் அரசாங்கம் இந்த எரிபொருட்கள் தொடர்பில் இன்னும் நிர்ணய விலையை அறிவிக்கவில்லை. இலாபம் பெறும் முறைமையை மறைக்கும் நோக்கிலே அரசாங்கம் செயற்படுவதாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
Loading...