ஜனவரியில் அமைச்சரவை மாற்றம்
எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளுக்கு முன்னர் இந்த அமைச்சரவை மாற்றம் இடம் பெறவுள்ளதாகவும், இதேவேளை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் சிலரும், அரசாங்கத்துடன் இணைவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு அரசாங்கத்துடன் இணைந்துக் கொள்ளவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள் கிடைக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும், வழங்கப்படவுள்ள இராஜாங்க அமைச்சு பதவி குறித்து இதுவரை இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
