அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலம் களைப் போன்று மத்திய வர்க்க விவசாயிகள் தற்போது தங்களது வீடுகளை நெற்களஞ்சியமாக பாவிக்க முடியாத இடப் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது என்பதனை நாம் யாவோரும் அறிவோம் .இதனைத் தீர்த்து வைக்கும் முகமாக பாரிய நெற்களஞ்சிய சாலை ஒன்றினை அம்பாறை மாவட்டத்தில் அமைப்பதன் மூலம் தீர்த்து வைக்க முடியும்.
இவர்களது அறுவடைக் காலத்தில் இக் களஞ்சிய சாலையில் இவர்களது நெற்பொதிகளை பாதுகாப்பாக வைக்க முடியும் . இதற்காக விவசாயிகளிடம் இருந்து ஒரு குறிப்பட்ட கட்டணம் அறவிடப் படலாம் .
இதன் மூலம் விவசாயிகள் தங்களது நெற் பொதிகளை பாது காப்புடன் வைப்பது மட்டும் அல்ல அவர்களுக்கு தேவையான நேரத்தில் பொருட்களை விற்றுக் கொள்ளமுடியும். களஞ்சிய பற்றாக் குறையினால் மொத்தமாக அரிசி ஆலை முதலாளிகளிடம் குறைந்த விலையில் விற்றுத் தள்ளுவதை விட நெல்லுக்கு விலை ஏறும் நிலையில் அவர்கள் அதிக விலைக்கு விற்று அதிக லாபம் பெற வாய்ப்புகள் உண்டு .
இவ்வாறன ஒரு பொறி முறைத் திட் டம் ஒன்றை தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் வகுத்துள்ளதோடு மிக விரைவில் நடை முறைப்படுத்த முயற்சிகளை மேற் கொண்டுள்ளார் . இதனால் விவசாயிகள் வியாபாரிகளகாக செயல் பட முடியும்