Saturday, 19 December 2015

பட்ஜெட் நிறைவேற்றம்

தேசிய அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம், முன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால், நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை நிறைவேறியது.
சட்டமூலத்துக்கு ஆதரவாக 160 பேரும் எதிராக 51 பேரும் வாக்களித்தனர். 13 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இதன்படி, இவ்வரவு செலவுத் திட்டம் 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பு, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில், மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்களும் இணைந்த எதிர்க் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் எதிராக வாக்களித்திருந்தனர்.
எனினும், லக்ஷ்மன் செனவிரத்ன, டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
மஹிந்த ராஜபக்ஷ, அலிஸாஹிர் மௌலான, எம். கே .டி. எஸ், குணவர்தன, பிரேமலால் ஜயசேகர, கீதா குமாரசிங்க, விமல் வீரவன்ச, ஜனக்க பண்டார தென்னகோன், நடேசன் சிவசக்தி, மனுஷ நாணயக்கார ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
Loading...
  • Can Sri Lanka Be Better Off With An Achchāru Government?25.06.2015 - Comments Disabled
  • பெண்களே “கண்கள்!“ அழகுநோக்கிய அபாயம்?26.06.2016 - Comments Disabled
  • மகிந்தவை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவே நான் தேர்தலில் குருநாகலில் போட்டியிடுகிறேன்-சிவாஜிலிங்கம்22.07.2015 - Comments Disabled
  • தொடர்ந்து இருமிக் கொண்டிருப்பவர்களுக்கு14.08.2015 - Comments Disabled
  • . இலங்கை முஸ்லிம்கள் மஹிந்த ஆட்சியிலிருந்து பல பாடங்களை படித்து விட்டனர்.08.05.2015 - Comments Disabled