Wednesday, 2 December 2015

சட்டக்கல்லூரிப் பரீட்சை வினாத்தாள்கள் மும்மொழியிலும் அச்சிட நடவடிக்கை

சட்டக்கல்லூரிப் பரீட்சை வினாத்தாள்கள் மும்மொழியிலும் அச்சிட நடவடிக்கை
சட்டக்கல்லூரிப்   பரீட்சை வினாத்தாள்கள் மும்மொழியிலும் அச்சிட நடவடிக்கை





சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான பரீட்சை வினாத் தாள்களை அரச மொழி கொள்கைக்கமைய மூன்று மொழிகளிலும் அச்சிடுவதற்கு நடவடிக்கை மேற் கொண்டுள்ளதாக நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்  இன்று புதன் கிழமை, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், தற்போது அந்த கொள்கை நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளாதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும்  2014 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் மட்டும் வினாத்தாள் வழங்கப்பட்டமையினால் தமிழ், சிங்கள மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ சுட்டிக்காட்டியிருந்தார்.
Loading...