Wednesday, 2 December 2015

நாடு தழுவிய ரீதியில் நாளை வேலை நிறுத்தப் போராட்டம்

நாடு தழுவிய ரீதியில் நாளை வேலை நிறுத்தப் போராட்டம்
 நாடு தழுவிய ரீதியில் நாளை வேலை நிறுத்தப் போராட்டம்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் உட்பட 16 தொழிற்சங்கத்தினர்  நாளை (வியாழக்கிழமை) நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தேசிய அரசாங்கத்தின்  வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளில், அரச அதிகாரிகளுக்கான தீர்வையற்ற வாகன அனுமதி இரத்து செய்யப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை, நாடுதழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தினை மேற்கொள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும், சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கான அனுமதி இரத்து செய்யப்பட்டிருந்த போதிலும், வைத்திய அதிகாரிகளுக்கு 1 மில்லியன் வரையில் நிதி கொடுக்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...