
பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டோம். இனியும் பொறுக்க முடியாது. அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட, எமக்கும் தமிழ் மக்களுக்கும் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்று நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான குழு நிலை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்
|