Tuesday, 8 December 2015

வட, கிழக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் விசேட வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதி.














வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் விசேட வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாறறும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

அந்த வகையில் மீள்குடியேற்றம் குறித்து ஆளும் மற்றும் எதிர்க் கட்சியினர் பல்வேறு யோசனைகளை முன் வைத்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிணங்க விரைவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும், மீள்குடியேற்ற பகுதிகளுக்கு நேரடியாக சென்று கண்காணிப்;பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் பொலித்தீன் பாவனை தொடர்பில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Loading...